ஒன்றரை நாள் போர் நிறுத்தம்: புதின் கட்டளை
2023-01-06 10:57:39

மாஸ்கோ நேரப்படி 6ஆம் நாள் 12 மணி முதல் 7ஆம் நாள் வரை  ரஷிய-உக்ரைன் படைப்பிரிவின் தொடர்பு கோட்டுப் பகுதியில் 36 மணிநேர போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த ரஷிய அரசுத் தலைவர் புதின் 5ஆம் நாள் கட்டளையிட்டார். அதே கால அட்டவணையின்படி உக்ரைன் படையும் போர் நிறுத்தத்தை நடத்துமாறு அவர் உக்ரைன் தரப்பைக் கோரியுள்ளார். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள காலம் உள்ளூர் கிழக்கத்திய மரபுவழித் திருச்சபையின் கிறிஸ்மஸ் திருவிழாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து உக்ரைன் அரசுத் தலைவர் அலுவலக ஆலோசகர் போதொலியாக் சமூக வலைத்தளம் வழி கருத்து தெரிவிக்கையில், ரஷிய படையினர்கள் உக்ரைனின் உரிமைப் பிரதேசத்திலிருந்து விலகினால் மட்டுமே தற்காலிக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.