சீன மத்திய தொழில் நிறுவனங்களின் பெரும் சாதனை
2023-01-06 11:01:52

சீன மத்திய தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள்களுக்கான கூட்டத்தை அரசு சொத்துக்களுக்கான மேற்பார்வை மற்றும் நிர்வாக ஆணையம் ஜனவரி 5ஆம் நாள் நடத்தியது. கரோனா வைரஸ் பரவல், உலகளவிலான பண வீக்கம் உள்ளிட்ட சாதகமற்ற சூழல்கள் காணப்படும் நிலைமைகளில், 2022ஆம் ஆண்டு சீன மத்திய தொழில் நிறுவனங்கள் சீரான சாதனைகளைப் பெற்று, சீனப் பொருளாதாரத்துக்கான முக்கிய ஆதரவாக மாறியுள்ளன என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டு, சீன மத்திய தொழில் நிறுவனங்களின் வருமானம் 39 லட்சத்து 40 ஆயிரம் கோடி யுவானை எட்டி, 8.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. மொத்த லாபம் 2 லட்சத்து 55 ஆயிரம் கோடி யுவானை எட்டி, 5.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. நிகர லாபம் 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி யுவானை எட்டி 5 விழுக்காடு அதிகரித்துள்ளது.