தொற்றுநோய் அறைகூவலைச் சமாளிக்க சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சீனா
2023-01-06 18:05:04

தொற்று நோய் அறைகூவல்களை நன்கு சமாளித்து, மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் விதமாக, உலக சுகாதரா அமைப்பு உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌ நிங் 6ஆம் நாள் வெள்ளிக்கிழமைத் தெரிவித்தார்.

அவர் செய்தியாளர் கூட்டத்தில் மேலும் கூறுகையில்

ஜனவரி 5ஆம் நாளன்று, உலக சுகாதார அமைப்பின் அழைப்பை ஏற்று,  இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்குமாறு சீனா நிபுணர்களை அனுப்பியுள்ளது. இதில், சீனாவில் கோவிட்-19 தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், உருமாறிய வைரஸ் திரிபுகள் மீதான கண்காணிப்பு,  தடுப்பூசி செலுத்துதல், மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட நிலைமைகளை சீன நிபுணர்கள் அறிமுகம் செய்துள்ளனர். மேலும் உறுப்பு நாடுளுடன் ஆக்கப்பூர்வமான பரிமாற்றம் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

அதேவேளையில், சீன தரப்பு வைரஸ் மரபணு வரிசை பற்றிய தரவுகளை தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்து வருகிறது. கடந்த சில வாரங்களில், தொற்று நோய் தகவல்களின் பகிர்வை சீனா அதிகரித்துள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது