சிக்கலுக்குள்ளாகிய அமெரிக்க பிரதிநிதிகளவைத் தலைவருக்கான தேர்தல்
2023-01-06 10:52:02

அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் அவைத் தலைவருக்கான தேர்தலில் 5ஆம் நாள் பிற்பகல் 10ஆவது சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 200 வாக்குகளைப் பெற்ற குடியரசுக் கட்சித் தலைவர் கெவின் மெக்கார்த்தி, 212 வாக்குகளைப் பெற்ற ஜனநாயக கட்சி உறுப்பினர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ்விடம் தோல்வியைத் தழுவியதால், பிரதிநிதிகள் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இதனால் புதிய பிரதிநிதிகள் அவையும் பதவியேற்க முடியாத சூழல் உருவாகியது. இது சர்வதேசச் சமூகத்தின் பரந்த கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் இரு கட்சிகளுக்கிடையில் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நெடுக்கடியை வெளிநாட்டு ஊடகங்கள் விமர்சித்து வருவதுடன், அந்நாட்டின் அரசியல் பிளவு நோக்கி சென்று வருவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

பிபிசி வெளியிட்ட விமர்சனச் செய்தியில், அமெரிக்க பிரிதிநிதிகள் அவைத் தேர்தல் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. குடியரசுக் கட்சியில் கடுமையான பிளவு நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் அமெரிக்காவின் அரசியல், குழப்பம் மற்றும் உறுதியற்ற நிலைமைக்கு உள்ளாகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

சமூக வளைதளங்களில் பலரும் அமெரிக்காவின் அரசியல் உடைந்துள்ளதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.