சீன-பிலிப்பைன்ஸ் நட்புறவில் புத்துயிர்
2023-01-06 11:09:51

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் மார்கோஸைச் சந்தித்துரையாடினார். அவர்கள் இரு நாட்டுறவுக்கு முக்கியத்துவம் அளித்து, பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்குவது, கடல் சார் விவகாரங்களைக் கையாள்வது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து முக்கிய ஒத்த கருத்துகளை எட்டினர்.

கடந்த ஆண்டு ஜுன் திங்கள் மார்கோஸ் அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பிறகு, ஆசியானுக்கு அப்பாற்பட்ட நாடுகளில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். அதோடு, அவர் இவ்வாண்டில் சீனா உபசரித்த முதலாவது வெளிநாட்டுத் தலைவரும் ஆவார். கடந்த சில ஆண்டுகளில் சீன-பிலிப்பைன்ஸ் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் உயிராற்றல் காணப்படுகிறது. இதனால் சீனா, பிலிப்பைன்ஸின் மிக முக்கிய வர்த்தகக் கூட்டாளி, மிக பெரிய இறக்குதி நாடு மற்றும் 2வது பெரிய ஏற்றுமதி நாடாக, மாறியுள்ளது. இந்நிலையில், இரு தரப்பும், வேளாண்மை, அடிப்படை வசதிகள், எரியாற்றல், மனித தொடர்பு ஆகிய 4 துறைகள் சார்ந்து முக்கியமாக ஒத்துழைப்பு மேற்கொள்வதை உறுதி செய்துள்ளன.

அதோடு, சீனாவும் பிலிப்பைன்ஸும், நட்பு கலந்தாய்வு மற்றும் பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையைத் தீர்த்து, தென் சீனக் கடல் பகுதியை, அமைதி, நட்பு மற்றும் ஒத்துழைப்பு வாய்ந்த கடல் பகுதியாகக் கட்டியமைக்கப் பாடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.