சீனப் புத்தாண்டு விழாவுக்கான போக்குவரத்து சேவை தயார்
2023-01-06 19:36:30

சீன புத்தாண்டு விழாவுக்கான போக்குவரத்துப் பணிகள்  குறித்து சீனப் போக்குவரத்து அமைச்சகம் ஜனவரி 6ஆம் நாள் வெள்ளிக்கிழமை  செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அப்போது, சீனப் போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் சு செங்குவாங் கூறுகையில், இவ்வாண்டின் சீனப் புத்தாண்டு விழாவுக்கான போக்குவரத்து சேவை ஜனவரி 7ஆம் தேதி முதல் ஆரம்பித்து பிப்ரவரி 15ஆம் நாள் வரை முடிவுக்கு வரும். தற்போது,  அதற்கான ஏற்பாட்டுப் பணிகள் தயாராகியுள்ளன என்று தெரிவித்தார்.

வரும் 40 நாட்களில் சுமார்  209 கோடிக்கும் அதிகமான பயணங்கள் மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 99.5 விழுக்காடு அதிகரித்து,  2019ஆம் ஆண்டில் இருந்ததன் 70.3 விழுக்காட்டை எட்டும் கணிக்கப்பட்டுள்ளது.