சீனப் பயணிகளுக்கு ஆசிய-பசிபிக் பிரதேச நாடுகள் வரவேற்பு
2023-01-06 15:59:33

2023ஆம் ஆண்டின் துவக்கத்தில், ஆசிய-பசிபிக் பிரதேச நாடுகளின் பொருளாதார மீட்சிக்கு சீனப் பயணிகளின் வருகை மேலதிக நம்பிக்கையை வழங்கியுள்ளது.

தாய்லாந்து நிதி அமைச்சர் அண்மையில் கூறுகையில், உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போதிலும், சீன மக்கள் வெளிநாட்டுப் பயணத்தை மீண்டும் துவங்குவது உள்ளிட்ட காரணங்களால், இவ்வாண்டு தாய்லாந்தின் பொருளாதாரம் 3.8 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என்றார்.

மேலும், இந்தோனேசிய சுற்றுலா துறையின் மீட்சிக்கு சீனப் பயணிகள் முக்கியமானவர்கள் என்று அந்நாட்டின் சுற்றுலா மற்றும் புத்தாகப் பொருளாதார அமைச்சர் அண்மையில் தெரிவித்தார்.

தவிரவும், இவ்வாண்டு கம்போடியாவில் பயணம் மேற்கொள்ளும் சீனப் பயணிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டி, கம்போடியப் பொருளாதார அதிகரிப்பை முன்னேற்ற வேண்டும் என்று கம்போடியத் தலைமையமைச்சர் சம்தேக் ஹன் சென் விருப்பம் தெரிவித்தார்.

மேலும், புதிய சுற்றுலா திட்டங்களை உருவாக்கும் விதம், நியூசிலாந்தின் சில சுற்றுலா நிறுவனங்கள் சீனத் தரப்புடன் தொடர்பு மேற்கொள்ளத் துவங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.