கரோனா வைரஸ் பரவலை ஆயுதமயமாக்கும் அமெரிக்கா
2023-01-07 17:57:56

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் கொள்கையை மாற்றிய சீனாவின் மீது அமெரிக்கா அவத்தூறு கூற தொடங்கியது. அமெரிக்கா, குறிப்பிட்ட நேரத்தில், கரோனா வைரஸ் தொற்று பிரச்சினையைப் பயன்படுத்தி, இதர நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 3 ஆண்டுகளில் கரோனா வைரஸ் பரவலை அமெரிக்கா கட்டுப்படுத்திய நடவடிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, இதை அறிந்து கொள்ளலாம்.

கரோனா நோய் தொற்று சமாளிப்பைக் களங்கப்படுத்துவது, அமெரிக்காவின் முதல் ஆயுதமாகும்.

முக கவசங்களை அணிவது மனித உரிமையை மீறிய நடவடிக்கையாகும் என்று 2020ஆம் ஆண்டு பிப்ரவரி சீனாவின் வூகன் நகரில் கரோனா வைரஸ் பரவல் நிலைமை மோசமாகிய போது அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. 2020ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் நாள் இதர நாடுகளிலிருந்து முக கவசங்களை இறக்குமதி செய்த பெயர் பட்டியலிலிருந்து சீனாவை அமெரிக்கா நீக்கியது. 2020ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் அமெரிக்காவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முதன்முதலில்  உச்சத்துக்கு வந்தது. 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் நாள் அமெரிக்க அரசு, 46 சீன தொழில் நிறுவனங்களிலிருந்து முக கவசங்களை இறக்குமதி செய்ய அவசர அனுமதி அளித்தது.

கரோனா வைரஸின் தோற்றமிடத்தை ஆய்வு செய்வதை அரசியல்மயமாக்கம் செய்வது அமெரிக்காவின் 2ஆவது ஆயுதமாகும்.

2021ஆம் ஆண்டு அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் மிக கடுமையாக இருந்த காலத்தில் ஜோ பைடன், அமெரிக்காவின் புதிய அரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். அறிவியலைப் பின்பற்றி கரோனா வைரஸ் நோய் தொற்றைச் சமாளிக்கும் தேசிய நெடுநோக்கை பைடன் பதவி ஏற்ற 2ஆவது நாளில் அறிவித்தார்.

பணியாளர் பற்றாகுறை என்ற காரணத்தால், அமெரிக்காவின் நியுக்லிக் சோதனை முடிவு 10 நாட்களுக்குப் பிறகு கிடைக்கலாம். பல்வகை கரோனா வைரஸின் திரிபுகள் முழு அமெரிக்காவில் பரவி வருவது இதன் விளைவாகும்.

பொருளாதார பிரச்சினை குறித்து அவதூறு கூறுவது அமெரிக்காவின் 3ஆவது ஆயுதமாகும்.

அண்மையில் அமெரிக்காவிலுள்ள கரோனா வைரஸ் நோய் தொற்று புதிய உச்ச நிலையை எட்டியது. கடந்த 3 ஆண்டுகளின் அனுபவங்களின் படி, அமெரிக்கா சீனாவின் மீது அவதூறு கூறி வருகிறது. இம்முறை, சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் மீது அது அவதூறு கூறியது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை சீனாவின் ஏற்றுமதி, உலகிற்கு ஆற்றிய பங்கு முதலிடத்தை வகிக்கின்றது. கடந்த 3 ஆண்டுகளில் சீனா வினியோக சங்கிலியை நிதானப்படுத்தி, உலக பொருளாதார மீட்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

அமெரிக்காவின் கருத்தில், கரோனா வைரஸ் பரவல், பல்வகை அவதூறுகளை ஏற்படுத்தும் ஆயுதமாகும். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கு மிக கடுமையான தடை இதுவே ஆகும்.