திபெத்தில் காலநிலை கண்காணிப்பு நிலையங்களின் கட்டுமானம்
2023-01-07 16:24:59

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் காலநிலை பணியகத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, கடந்த 10 ஆண்டுகளில் திபெத்தில் பல்வகை காலநிலை கண்காணிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 162 இலிருந்து 1097ஆக அதிகரித்துள்ளதோடு, காலநிலை ராடார் கட்டுமானத் திட்டங்கள் அடுத்தடுத்து நடைமுறைக்கு வந்துள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் காலநிலை சேவை நிறுவனங்களும், அனைத்து வட்டங்களிலும் தானியங்கி காலநிலை நிலையங்களும் பரவலாக்கப்பட்ட சாதனை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், திபெத்தில் வேளாண்துறைக்கு காலநிலை சேவைபுரியும் 45 முன்மாதிரி தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 555 புதிய ரக விவசாய நிறுவனங்களுக்கு நேரடி சேவை வழங்கும் இத்தளங்கள், பேரிடர் தடுப்பு மற்றும் குறைப்புக்கு உத்தரவாதம் அளித்து வருகின்றன.