கரோனா தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் புதிய பதிப்பு வெளியீடு
2023-01-07 16:50:35

புதிய ரக கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் 10ஆவது பதிப்பை சீன அரசவையின் கூட்டு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயங்குமுறை ஜனவரி 7ஆம் நாள் வெளியிட்டது. தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தனிநபர் பாதுகாப்பை ஊக்குவிக்கும் இத்திட்டத்தில், நோய் தொற்று மூலக் கட்டுப்பாடு மற்றும் சோதனை முறை சரிப்படுத்தப்பட்டு, முக்கிய பகுதிகளிலுள்ள தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கை மேம்படுத்தப்படுவதோடு, தொற்றுநோய் பரவல் காலத்தில் அவசரத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இயல்பான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை தொற்று நோய் பரவல் காலத்தில் அவசர நடவடிக்கையுடன் ஒன்றிணைப்பதில் ஊன்றி நின்று, கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை திறனை உயர்த்த வேண்டும் என்றும், பொது மக்களின் யிர் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தை இயன்ற அளவில் பாதுகாத்து, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க வேண்டும் என்றும் இத்திட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.