பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான பேட்டி
2023-01-07 18:47:49

2023ஆம் ஆண்டின் துவக்கத்தில், பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் சீனாவில் பயணம் மேற்கொண்டார். 49 ஆண்டுகளுக்கு முன், 16 வயதான அவர் தாய்யுடன் சீனாவில் பயணம் மேற்கொண்டு, சீன-பிலிப்பைன்ஸ் தூதாண்மை உறவின் உருவாக்கத்தை நேரில் கண்டுள்ளார்.

மீண்டும் பெய்ஜிங்கிற்கு வருகை தந்தது பற்றி அவர் கூறுகையில், 1974 முதல் 2023ஆம் ஆண்டு வரை சீனாவின் வளர்ச்சி மற்றும் பெரும் முன்னேற்றத்தை நேரில் காண்பது, எனது மிக முக்கிய அனுபவங்களில் ஒன்றாகும். தற்போது, பொருளாதார வல்லரசான சீனா, அற்புதமான சாதனைகளைப் பெற்றுள்ளது என்றார்.

மேலும், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து மீட்சியடைந்து வருகின்றன. சீனா உள்ளிட்ட நாடுகளுடனான கூட்டாளி உறவு உலகத்தின் நிலைத்தன்மைக்குத் துணைப் புரியும். எனது இப்பயணம், இரு தரப்புறவை மேலும் வலுப்படுத்தும். தென் சீனக் கடல் தொடர்பான விவகாரத்தில் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் கருத்துவேற்றுமை இருந்த போதிலும், இரு நாடுகள் இன்னும் நல்ல கூட்டாளிகளாகும். எதிர்காலத்தில், இரு தரப்புகள் நட்புப்பூர்வ மற்றும் நேர்மையான கலந்தாய்வின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவும் பிலிப்பைன்ஸும், அரசுகளுக்கிடையிலான 40 ஒத்துழைப்புத் திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளன. தற்போது, பிலிப்பைன்ஸின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும், மிகப் பெரிய இறக்குமதி நாடாகவும், 2வது பெரிய ஏற்றுமதி நாடாகவும் சீனா திகழ்கிறது. இரு நாட்டுப் பொருளாதார மீட்சி மற்றும் செழுமையை இது பெரிதும் முன்னேற்றி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தவிரவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, ஷி ச்சின்பிங் தொடர்ச்சியாக பொதுச் செயலாளராகப் பதவி ஏற்பது நல்ல தகவலாகும். இதனால், சீனாவுக்கும் இப்பிரதேசத்துக்கும் நிலைத்தன்மை வழங்கப்படும். இந்நிலையில், சீன-பிலிப்பைன்ஸ் ஒத்துழைப்புக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.