அறிவியல் ரீதியான கருத்துக்களை அமெரிக்க அரசியல் வாதிகள் கேட்டறிய வேண்டும்!
2023-01-07 17:45:27

சீனப் பயணிகளின் மீது அமெரிக்கா தடை விதிப்பதற்கு எதிராக, செல்வாக்குமிக்க அமெரிக்க தொற்றுநோய் சங்கம் ஜனவரி 6ஆம் நாள் தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வைரஸ் பரவல் தடுப்புக்கு இது அவ்வளவு பயன் அளிக்காது மட்டுமல்ல, உலகளவில் நோயாளிகளின் அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்பு பற்றி மதிப்பீடு செய்யவும் துணைபுரியாது என்று தெரிவித்தது.

சமீபக் காலத்தில் இச்சங்கம் தவிர, தொற்று நோயியல் நிபுணர்கள் பலரும், சீனா மீது சுற்றுலா தடை விதிக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். சர்வதேச விமான நிலைய கவுன்சிலின் ஐரோப்பிய கிளையும் அண்மையில் சீனர்களின் மீதான நுழைவு தடையைக் கண்டித்துள்ளது.

புதிய ரக கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம், அறிவியல் அடிப்படையிலான போராட்டமாகும். அறிவியல் ரீதியான கருத்துக்களை அமெரிக்க அரசியல் வாதிகள் சீராக கேட்டறிய வேண்டும். வைரஸ் தடுப்பைப் பயன்படுத்தி சீனாவைத் தடுக்க விரும்பும் அமெரிக்காவின் இம்முயற்சியானது, அறிவுக்கு எதிரான அதன் வழக்கமான செயலையும், தொற்றுநோயை அரசியல் மயமாக்கும் நோக்கத்தையும் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு உள்பட பல தரப்புகளின் முன்னெச்சரிக்கைகளை அமெரிக்கா அலட்சியம் செய்ததால், அந்நாட்டில் வைரஸ் பரவல் தீவிரமாக ஏற்பட்டது. உலகளவில் வைரஸ் நோயாளிகளும் இந்நோயால் உயிரிழந்தோரும் மிக அதிகமாக உள்ள நாடாக அது மாறியுள்ளது.

தற்போது சீனாவில் பரவி வரும் முக்கிய வைரஸ் திரிபுகளான BF.7  மற்றும் BA.5 முன்பாகவே உலகின் பல்வேறு இடங்களிலும் பரவியுள்ளன. இவ்வைரஸ் திரிபுகள் வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு பரவின. ஆனால் தற்போது அமெரிக்காவில் 40 விழுக்காட்டுக்கு மேலான கோவிட்-19 நோய் தொற்று பாதிப்பு xbb.1.5 எனும் புதிய திரிபினால் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவால் ஏற்படும் நோய்தொற்று இடர்பாட்டைத் தடுக்க வேண்டும்.

தொற்றுநோய் தடுப்புக்கு அறிவியல் ரீதியான வழிமுறைகளே தேவை. இதற்கு எதிராக செயல்பட்டால், தனக்குத் தானே தீங்குவிளைவிக்கும் என்பது உறுதி.