சீன சேவைத் துறையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு
2023-01-07 16:41:43

சீன வணிக அமைச்சகம் ஜனவரி 6ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை, சீன சேவைத் துறையின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொகை 5 லட்சத்து 40 ஆயிரத்து 461 கோடி யுவானாகும். 2021ஆம் ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 15.6 விழுக்காடு அதிகமாகும். சேவை வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும், அறிவாற்றல் செறிவான சேவை வர்த்தகம் சீராக அதிகரித்து வருகிறது. சுற்றுலா சேவையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்ச்சியாக மீட்சியடைந்து வருகிறது. 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை, சீன சுற்றுலா சேவையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொகை 75 ஆயிரத்து 805 கோடி யுவானை எட்டி, 2021ஆம் ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 8.2 விழுக்காடு அதிகமாகும்.