கரோனா நோய் தொற்றைச் சமாளிப்பதில் மோசமாக செயல்படும் அமெரிக்கா
2023-01-08 17:42:13

அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட தரவுகளின் படி, கடந்த 3 ஆண்டுகளில், அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் 5 முறை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்ச நிலைக்கு வந்த போது, அமெரிக்க சுகாதார அமைப்பு முடக்க நிலையில் இருந்தது.

அமெரிக்காவின் மோசமான செயல்பாடு மற்றும் தவறான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால், கிட்டத்தட்ட கரோனா வைரஸின் அனைத்து திரிபுகளும் அந்நாட்டில் பரவியுள்ளன. 10 கோடிக்கு மேலான பாதிக்கப்பட்டவர்களில் 10 இலட்சத்து 80 ஆயிரத்துக்கு மேலானோர் உயிரிழந்தனர். இதனால் 2 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள், அநாதைகளாகினர். உலகில் மிக சிக்கலான நிலைமைக் கொண்ட நாடு அமெரிக்கா. இதைத் தவிர்த்து கரோனா நோய் தொற்று சமாளிப்பின் தோல்வியினால், நிறைய மருத்துவ பணியாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். அமெரிக்காவின் பொது மருத்துவ சேவை கடினமாக இருந்தது.

கரோனா நோய் தொற்றை அமெரிக்கா அரசியல் மயமாக்குவதும், ஆயுதமயமாக்குவதும் மேற்கூறிய பிரச்சினைகளுக்கான காரணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சீனா, கடந்த 3 ஆண்டுகளில் சரியான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொண்டதால், 5 முறை மிக கடுமையான நோய் தொற்றைச் சமாளித்து, கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்ததுடன், தடுப்பூசி ஆய்வுக்கும் மருத்துவ பொருட்களைத் தயாரிப்பதற்கும் உரிய நேரம் கிடைத்தது.

பிரிட்டனின் விளக்க திரைப்பட தயாரிப்பாளர் மால்கோல்ம் கிளார்க் கடந்த 3 ஆண்டுகளில் சீனாவில் தங்கியிருந்தார். அவர் கூறுகையில்,

பொது மக்களின் உயிரையும் ஆரோக்கியத்தையும் சீனா அரசு பேணிக்காத்து வருகின்றது. இதிலிருந்து நான் நலன் பெற்றேன் என்றார்.