சீனாவில் வசந்த விழா போக்குவரத்து துவக்கம்
2023-01-08 16:16:24

சீன அரசவையின் கூட்டுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயங்குமுறையைச் சேர்ந்த வசந்த விழா போக்குவரத்து பணியகம் வெளியிட்ட தகவலின்படி, ஜனவரி 7ஆம் நாள், சீனாவில் இருப்புப்பாதை, நெடுஞ்சாலை, கப்பல், விமானம் ஆகிய வழிமுறைகளின் மூலம் பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 36 ஆயிரத்தை எட்டியது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் நாள் இருந்ததை விட இது 11.1 விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 38.9 விழுக்காடு அதிகமாகும்.