கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் சீனாவின் சாதனையை தூற்றும் அமெரிக்கா
2023-01-08 19:33:46

பி வகையின் பி நிலை கட்டுப்பாட்டுக் கொள்கை ஜனவரி 8ஆம் நாள் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு வரும் நபர்கள் மற்றும் சரக்குகளின் மீது நோய் கிருமி தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது. சீனர்களின் வெளிநாட்டுப் பயணம் மீட்சியடைந்து வருகிறது. சுற்றுலா இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 8ஆம் நாள் சீனாவுக்கு வரவும் வெளிநாட்டுக்குச் செல்லவும் முன்பதிவு செய்யப்பட்ட விமானச் சீட்டுகளின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு மார்ச் திங்கள் முதல் இதுவரையில் உச்ச நிலையை எட்டியது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியுடன் ஒருங்கிணைப்பதற்கும், சீன மற்றும் வெளிநாட்டு மக்களின் தொடர்புக்கும் துணைப் புரியும் விதம், கடந்த 3 ஆண்டுகளில், கரோனா வைரஸ் பரவல் தடுப்புக் கொள்கையை சீனா நிலைமைக்கிணங்க முன்முயற்சியுடன் சரிப்படுத்தி வந்தது. சீனப் பொருளாதாரத்தின் உயர்வேக மீட்சி, உலகப் பொருளாதாரத்துக்கு நல்லது என்று பல சர்வதேசப் பொருளாதார நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஆனால், அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள், சீனாவில் வைரஸ் பரவல் தடுப்புக் கொள்கை மீது அவதூறு தெரிவிப்பதுடன், அமெரிக்காவுக்குச் செல்லும் சீனப் பயணிகளின் மீது கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். இரட்டை வரையறை கொண்ட இச்செயல், வைரஸ் பரவல் தடுப்பில் சீனா பெற்றுள்ள சாதனைகளுக்கான பொறாமையைக் காட்டுகிறது.

3 ஆண்டுகால முயற்சியுடன், கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான புதிய கட்டத்தில் சீனா நுழைந்துள்ளது. உலகப் பொருளாதாரத்துக்கும் இது துணைப் புரியும்.

தற்போது அமெரிக்காவில் கரோனா வைரஸின் பல்வகை திரிபுகள் பரவி வருகின்றன. பொது மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அமெரிக்க அரசியல்வாதிகள் சுய மதிப்பீடு செய்யாமல், சீனாவின் சாதனைகளின் மீது பழி தூற்றி வருகின்றனர். அவர்களின் செயல்கள் மற்றும் நோக்கங்கள் மிகவும் மோசம்.