சீனாவின் 98.7 விழுக்காடு வட்டங்களில் காய்ச்சல் ஆலோசனை அறைகள் உருவாக்கம்
2023-01-08 17:05:51

தற்போது சீனாவின் 98.7 விழுக்காடு வட்டங்களிலுள்ள மருத்துவ நிலையங்களிலும், குடியிருப்பு மருத்துவ சேவை மையங்களிலும் காய்ச்சல் ஆலோசனை அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடிமட்ட காய்ச்சல் சிகிச்சை முறைகள் முழு நாட்டிலும் 60 விழுக்காட்டுக்கு மேல் உள்ளன. அடிமட்ட மருத்துவ நிறுவனங்கள், தொற்றுநோய்க்கு எதிரான முதல் பாதுகாப்பிடமாகப் பங்காற்றி வருகின்றன. சீன அரசவையின் கூட்டு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயங்குமுறை ஜனவரி 7ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.