சீனாவில் புதிய கொள்கையுடன் பல நுழைவாயில்களின் பயணியர் போக்குவரத்து மீட்சி
2023-01-08 16:09:52

புதிய ரக கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக, பி வகையின் பி நிலை கட்டுப்பாட்டுக் கொள்கை ஜனவரி 8ஆம் நாள் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. இதனிடையே தேசிய குடியேற்ற நிர்வாகத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, சீனா முழுவதிலும் உள்ள தரை வழி நுழைவாயில்களின் பயணியர் போக்குவரத்து படிப்படியாக மீட்சியடைந்து வருகிறது.

தற்போது, எல்லை பகுதிகளிலுள்ள மஞ்சுலி, ஏர்லியன்ஹாட், ஹோர்கொஸ், ருய்லி, மொகன், ஹேகொவ், சுய்ஃபென்ஹே, ஹுன்சுன் ஆகிய 8 நெடுஞ்சாலை நுழைவாயில்களின் பயணியர் போக்குவரத்து மீட்கப்பட்டுள்ளது. ஹாங்காங் மற்றும் மக்கௌ துறைமுகங்களின் அருகிலுள்ள எல்லை பரிசோதனைக்கான வசதியான பாதைகளும் ஒழுங்கான முறையில் மீட்கப்பட்டு வருகின்றன.