சீனா வழங்கிய பெரும் உதவிக்கு பாகிஸ்தான் நன்றி
2023-01-08 16:21:12

வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரணப்பணிக்கான பாகிஸ்தான் தலைமையமைச்சர் நிதியத்துக்கு சீன எரியாற்றல் கட்டுமானக் குழுமம் உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் தலைமையமைச்சர் முஹம்மது ஷபாஸ் ஷெரீப் ஜனவரி 6ஆம் நாள் பங்கெடுத்தார்.

அப்போது அவர் கூறுகையில், பாகிஸ்தானுக்கு நீண்டாகாலமாக உதவி மற்றும் ஆதரவு வழங்கி வரும் சீனாக்கு மிக்க நன்றி. குறிப்பாக, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் கடும் வெள்ளப் பெருக்கு நிகழ்ந்தது முதல் இதுவரை, சீனா அதிக உதவிகளை அளித்துள்ளது என்றார்.

மேலும், பாகிஸ்தான்-சீனப் பொருளாதார மண்டலத்தின் கட்டுமானம், பாகிஸ்தான் மக்களுக்கு நன்மை புரிந்துள்ளது. பாகிஸ்தான் எரியாற்றல் மற்றும் அடிப்படை வசதிக் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கட்டுமானத்தில் சீனத் தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன. பாகிஸ்தானின் புதிய எரியாற்றல் துறையில் சீனத் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வது வரவேற்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.