வட இந்தியாவில் கடும் குளிர் பாதிப்பு
2023-01-09 15:28:19

கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கடும் குளிரின் தாக்கம் ஏற்பட்டது. 8ஆம் நாள் புது தில்லியில் வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸாக குறைந்து, குளிர்காலத்தில் காணாத மிக குறைந்த பதிவை உருவாக்கியது. இந்த கடும் குளிர் காணமாக, புது தில்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடும் குளிரின் தாக்கத்துடன், புது தில்லி மற்றும் அதற்குப் பக்கத்திலுள்ள பகுதிகளில் அடர் பனி மூட்டம் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக உள்ளூர் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த குளிர்ப்புயல் இந்தியாவின் வட பகுதிகளில் அடுத்த 2 நாட்களாக நீடிக்குமென இந்திய வானிலை மையம் மதிப்பிட்டுள்ளது.