நோய் தொற்று தகவல்களை அமெரிக்கா உரிய நேரத்தில் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்:சீனா
2023-01-09 17:24:09

அமெரிக்கா தனது உள்நாட்டு நோய் தொற்று தகவல்கள் மற்றும் தரவுகளை உரிய நேரத்திலும் வெளிப்படையாகவும் உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஜனவரி 9ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தற்போது அமெரிக்காவில் புதிய வைரஸ் திரிபான XBB.1.5 மிக வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டில் ஏற்பட்ட வைரஸ் பாதிப்புகளில் இதனால் ஏற்பட்ட விகிதம் 40 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. தொடர்புடைய தகவல்கள் மற்றும தரவுகளைப் பகிர்ந்து கொள்வதோடு, இந்நோய் தொற்று பரவலைத் தடுக்கும் விதம், அமெரிக்கா பயனுள்ள நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.