ஷிஜியன்-23 செயற்கைக்கோள் ஏவுதல் வெற்றி
2023-01-09 11:06:32

ஜனவரி 9ஆம் நாள் காலை சீனாவின் வென்ச்சாங் விண்வெளி ஏவு மையத்திலிருந்து லாங்மார்ச்-7 ஏவூர்தி மூலம் ஷிஜியன்-23 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு, திட்டமிட்ட சுற்று வட்ட பாதையில் நுழைந்தது. இந்த ஏவுதல் கடமை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. அறிவியல் பரிசோதனைகள், தொழில்நுட்ப சரிபார்ப்பு உள்ளிட்ட துறைகளில், ஷிஜியன்-23 செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும்.