கிராமப்புறத்தில் தொற்று நோய் தடுப்புக்கான வழிக்காட்டல் வெளியீடு
2023-01-09 16:58:03

கிராமப்புறங்களில் கோவிட்-19 நோய் தொற்று தடுப்புப் பணியின் நடைமுறையின்படி, அங்குள்ள அடிமட்ட அமைப்புகளின் பங்குகளை மேலும் வெளிக்கொணரும் விதம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கிராமப்புறப் பணிக்கான தலைமைக் குழுவின் பணியகம், சீன அரசவையின் கூட்டு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயங்குமுறை, சீனப் பொதுத்துறை அமைச்சகம், சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம், சீனத் தேசிய கிராமப்புற புத்துயிர் நிர்வாகம் உள்ளிட்ட 8 வாரியங்கள் குறிப்பிட்ட வழிகாட்டல் ஆவணம் ஒன்றை கூட்டாக வெளியிட்டன.

புதிய ரக கரோனா வைரஸுக்கு எதிரான பி வகையின் பி நிலை கட்டுப்பாட்டுக்கான ஒட்டுமொத்த ஏற்பாடுகளை பல்வேறு இடங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும். அடிமட்ட கிராமப்புறக் கட்சிக் குழுகள், கிராமவாசிகளின் தன்னாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல்வகை அமைப்புகளை அணிதிரட்டி, நுணுக்கமான சேவை மற்றும் தகவல் தொழில் நுட்பங்களின் மூலம், அறிவியல் அடிப்படையில் நோய் தொற்று தடுப்பு பணியைச் சீராக மேற்கொண்டு, விவசாயிகளின் உயிர் மற்றும் ஆரோக்கியப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதனுடன் ஒருங்கிணைந்த முறையில் வேளாண் உற்பத்தியைச் செவ்வனே செய்ய வேண்டும் என்று இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.