ஹாங்காங்கில் அதிவேக தொடர்வண்டி சேவை மீண்டும் துவக்கம்
2023-01-09 16:07:56

சீனப் பெருநிலப்பகுதியையும் ஹாங்காங்கையும் இணைக்கும் அதிவேக தொடர்வண்டி சேவை ஜனவரி 15ஆம் நாளுக்குள் மீண்டும் துவங்கவுள்ளது. அதன் தொடர்புடைய ஆயத்தப் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானச்  சேவை ஏற்கனவே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.