ஒற்றுமையும் ஒத்துழைப்பும் தொற்றுநோய் தடுக்கும் வலிமை மிக்க ஆயுதம்!
2023-01-09 17:24:58

கோவிட்-19 பரவல் ஏற்பட்டு இது வரை 3ஆண்டுகளாக நீடித்துள்ளது. கடந்த நூற்றாண்டில் மனிதகுலத்தின் வரலாற்றில் ஏற்பட்ட மிக கடுமையான உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை சம்பவம் இதுவாகும். உலக சுகாதார அமைப்பு அண்மையில் வெளியிட்ட தரவின்படி, கடந்த 3ஆண்டுகளில் உலகளவில் கோவிட்-19 பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 66கோடியைத் தாண்டியுள்ளது. நேரடியாக அல்லது நேரடியற்ற முறையில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை கோடியையும் எட்டியுள்ளது. மனிதகுலம் ஒரே புவி கிராமத்தில் வாழ்கிறது. நம் எதிர்காலம் ஒருவருடன் ஒருவர் இணைந்திருக்கின்றது.

ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு தான் மனிதகுலம் தொற்றுநோய் பரவலைத் தோற்கடிக்கும் வலிமை மிக்க ஆயுதமாகுமென இந்த பெருந்தொற்றில் இருந்து விடை கிடைத்துள்ளது.

மிகப் பெருமளவுச் சுகாதார சம்பவத்தை எதிர்கொள்ள, எந்த ஒரு  நாட்டையும் அதிலிருந்து தவிர்க்க முடியாது. மனிதகுலம் கைகோர்த்து கொண்டு ஒத்துழைத்து மனித குலத்திற்கு பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட சுகாதார மற்றும் ஆரோக்கிய சமூகத்தைக் கூட்டாக உருவாக்கினால் தான், அனைவரும் கூட்டாக எதிர்காலத்தை முன்னோக்கிச் செல்ல முடியுமென பன்னாட்டு மக்கள் ஆழமாக உணர்ந்துள்ளனர்.

2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் சீனாவில் கோவிட்-19 பரவல் மிக கடுமையாக இருந்தது, சர்வதேச சமூகம் சீனாவுக்குப் பெரும் ஆதரவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. சீன மக்கள் இவை அனைத்தையும் ஒருபோதும் மறந்துவிடவில்லை.

தொற்றுநோய் பன்னாடுகளிலும் தீவிரமாகிய போது, நோய் தடுப்பு அனுபவங்கள் மற்றும் வழிமுறைகள் அனைத்தையும் சீனா உலகத்துடன் பகிர்ந்து கொண்டது.

120க்கும் அதிகமான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு 220கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகளைச் சீனா உதவியாக வழங்கியுள்ளது. மேலும் 153 நாடுகள் மற்றும் 15 சர்வதேச அமைப்புகளுக்குப் பெருமளவிலான நோய் தடுப்புப் பொருட்களை அளித்துள்ளது. 34 நாடுகளுக்கு மருத்துவ நிபுணர்கள் குழுகளை அனுப்பியுள்ளது. தடுப்பூசி உற்பத்தியில் வளரும் நாடுகளுடன் ஒத்துழைப்பை மேற்கொண்ட முதல் நாடாக சீனா விளங்கியுள்ளது.

கோவிட்-19 பரவல் ஏற்பட்டது முதல், உலக சுகாதார அமைப்பு மற்றும் தொடர்புடைய நாடுகளுக்குச் சீனா காலதாமதமின்றி நோய் பரவல் நிலைமையை அறிவித்துள்ளது. பன்னாடுகளின் நோய் தடுப்புக்குச் சிறந்த திட்ட வரைவை வழங்கியுள்ளது. தொற்றுநோய் தடுப்பை அறிவியல்பூர்வமான மனப்பான்மையுடன் சமாளிக்க வேண்டும். அதனை அரசியலாக்குவது போன்ற தந்திரம் நடத்தினால்,  சர்வதேச நோய் தடுப்பு ஒத்துழைப்பைச் சீர்குலைத்து உலக மக்களுக்கு மேலும் பெரிய தீங்கு விளைவிக்கும். உலக சுகாதார பாதுகாப்பு நிர்வாக அமைப்பு முறையை முழுமைப்படுத்துவது, மனிதகுலம் தொற்று நோய் பரவலைத் தோற்கடிக்கும் திறவுக்கோலாகும். உலகளாவிய அறைகூவலைச் சமாளிக்க, நாம் கைகோர்த்து கொண்டு மனிதகுலத்திற்கு பகிரப்பட்ட எதிக்லாம் கொண்ட சுகாதார மற்றும் ஆரோக்கிய சமூகத்தை உருவாக்குவோம்.