சீன வெளியுறவு அமைச்சரின் ஆப்பிரிக்க பயணம்
2023-01-09 17:01:51

சீன-ஆப்பிரிக்க பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டுறவை ஆழமாக்கி, சீன-ஆப்பிரிக்க நட்பு ஒத்துழைப்பை முன்னேற்றும் வகையில், சீன வெளியுறவு அமைச்சர் சின் கங், ஜனவரி 9 முதல் 16ஆம் நாள் வரை எத்தியோப்பியா, காபோன், அன்கோலா, பேனின், எகிப்து, ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகம், அரபு லீக் தலைமையகம் ஆகிய பகுதிகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 33 ஆண்டுகளில் சீன வெளியுறவு அமைச்சர்கள், ஒவ்வோராண்டின் துவக்கத்திலும் ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொண்டு வருவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 9ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,

இப்பயணம் சீன வெளியுறவு அமைச்சராக சின் காங் பதவி ஏற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாகும். சீன-ஆப்பிரிக்க பாரம்பரிய நட்புறவிலும் சீன-ஆப்பிரிக்க உறவு வளர்ச்சியிலும் சீனா அதிக கவனம் செலுத்தி வருவதை இது வெளிகாடுகிறது என்றார்.