இலங்கை-தாய்லாந்து தாராள வர்த்தக உடன்படிக்கைக்கான 3வது பேச்சுவார்த்தை
2023-01-09 16:25:50

இலங்கை-தாய்லாந்து தாராள வர்த்தக உடன்படிக்கைக்கான 3வது பேச்சுவார்த்தை ஜனவரி 9, 10 ஆகிய நாட்களில் கொழும்பில் நடைபெறும் என்று இலங்கை அரசுத் தலைவரின் ஊடகப்பிரிவு 8ஆம் நாள் தெரிவித்தது.

தாய்லாந்தைச் சேர்ந்த 26 பிரதிநிதிகள் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர். சரக்கு வர்த்தகம், சேவை வர்த்தகம், முதலீடு, தோற்ற இடங்களுக்கான விதிகள், சுங்கத் துறை ஒத்துழைப்பு, வர்த்தக வசதிமயமாக்கம், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.