உலகப் பொருளாதாரத்துக்கு வாய்ப்புகளை வழங்கும் சீன வளர்ச்சி
2023-01-10 17:34:44

கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சீனாவின் கொள்கையை மேலை நாடுகளின் ஊடகங்கள் அண்மையில் விமர்சித்தன.

இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஜனவரி 10ஆம் நாள் கூறுகையில், உண்மையிலே, கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சீனாவின் கொள்கை பொது மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடல் நலத்தைப் பாதுகாப்பதோடு, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியின் மீதான பாதிப்பை மிகப் பெருமளவிலும் குறைத்துள்ளது. மேலும், சீனாவின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் உயிராற்றல் மேலும் விடுவிக்கப்பட்டு, உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் மேலதிக வாய்ப்புகளை வழங்கும் என்றார்.