சீனாவில் புதிய எரிசக்தி வாகனங்களின் வளர்ச்சி
2023-01-10 11:50:31

2022ஆம் ஆண்டின் முதல் 6 திங்கள் காலத்தில் சீனாவில் புதிய எரிசக்தி வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை, முறையே 26 இலட்சத்து 61 ஆயிரம் மற்றும் 26 இலட்சம் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1.2 மடங்கு அதிகமாகும்.

2015ஆம் ஆண்டு முதல், சீனாவின் புதிய எரிசக்தி வாகன உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக உலகளவில் முதல் இடத்தில் உள்ளது.

கிராமப்புறப் பிரதேசங்களில் புதிய எரிசக்தி வாகனங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. கிராமப்புறத்தில் 2021ஆம் ஆண்டில் 10 இலட்சத்துக்கும் அதிகமான புதிய எரிசக்தி வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 169 விழுக்காடு அதிகமாகும். இதனிடையே, 2022ஆம் ஆண்டில் 26 வாகன தயாரிப்புத் தொழில்நிறுவனங்களின் 70 புதிய வகை எரிசக்தி வாகனங்கள் கிராமப்புறச்சந்தையில் நுழைந்துள்ளன.

2020ஆம் ஆண்டில் சீனா ஏற்றுமதி செய்த புதிய எரிசக்தி வாகனங்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 24 ஆயிரமாகும். 2021ஆம் ஆண்டில் இது 5 இலட்சத்து 90 ஆயிரமாகும்.  2022ஆம் ஆண்டின் முதல் 11 திங்கள் காலத்தில் இந்த எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.