குறிப்பிட்ட பாகுபாட்டு நடவடிக்கைக்கு சீனா பதிலடி
2023-01-10 18:58:09

தென் கொரியர்கள் சீனாவுக்குச் செல்வதற்கான குறுகிய கால விசாவின் இடைநீக்கம் பற்றி சீனாவிலுள்ள அந்நாட்டின் தூதரகம் அறிவிப்பு வெளியிட்டது. இது குறித்த கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 10ஆம் நாள் பதிலளிக்கையில், குறிப்பிட்ட சில நாடுகள் அறிவியல் ரீதியான உண்மைகளையும் சொந்த நாட்டின் நோய் தொற்று நிலைமையையும் பொருட்படுத்தாமல், சீனா மீது பாகுபாடுடைய தடை நடவடிக்கையை மேற்கொள்கின்றன. இதற்கு சீனா உறுதியான எதிர்ப்பு தெரிவிப்பதோடு, பதில் நடவடிக்கையையும் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த நாடுகள் உண்மையைக் கருத்தில் கொண்டு அறிவியல் ரீதியில் உகந்த அளவுக்கு நோய் தொற்று தடுப்பு கொள்கையை வகுக்க வேண்டும். அரசியல் கட்டுப்பாடு மற்றும் பாகுபாட்டு நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது. நாடுகளுக்கிடையே இயல்பான தொடர்பு மற்றும் ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.