அமெரிக்க மற்றும் பிரேசில் அரசுத் தலைவர்கள் தொலைபேசி வழி தொடர்பு
2023-01-10 14:18:09

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன், புதிதாக பிரேசில் அரசுத் தலைவராகப் பதவி ஏற்றுள்ள லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பின் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை 9ஆம் நாள் தெரிவித்தது.

இவ்விரு நாடுகளும் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளான காலநிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சி, தேசிய அமைதி மற்றும் பாதுகாப்பு முதலியவை குறித்து நெருக்கமாக ஒத்துழைக்க இரு தலைவர்கள் உறுதியளித்ததாகவும், பிப்ரவரி தொடக்கத்தில் வாஷிங்டனுக்கு வருமாறு சில்வாவுக்கு பைடென் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.