21வது நூற்றாண்டின் இறுதியில் உலகளவில் 83% பனிப்பாறைகளுக்கு உருக வாய்ப்புள்ளது
2023-01-10 10:39:12

கடந்த சில ஆண்டுகளில் காலநிலை மாற்றம் காரணமாக, உலகெங்கிலும் உள்ள பல பனிப்பாறைகள்  மிக வேகமாக  உருகி வருகின்றன. இதுதொடர்பாக, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் படி, உலகின் பனிப்பாறைகளில் பாதி முதல் 83 விழுக்காடு வரையிலான பனிப்பாறைகள் 21வது நூற்றாண்டின் இறுதியில் முற்றிலும் உருகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன் மதிப்பீட்டை விட பனிப்பாறைகள் வேகமாக உருகி மறைந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

2015ஆம் ஆண்டில் ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் பாரிஸ் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, 21ஆம் நூற்றாண்டில் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சில நாடுகள் தங்கள் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் கடமைகளை நிறைவேற்ற ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால் உலக வெப்பநிலை குறைந்தது 2.7 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று 2021ஆம் ஆண்டின் அக்டோபர் 26ஆம் நாள் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. .