சீனச் சந்தை மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை
2023-01-10 12:03:24

உலக முதலீட்டாளர்கள் சீனாவுக்குத் திரும்பி வணிகம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக முதலீட்டு நிறுவனத்தின் நிபுணரின் கருத்தை மேற்கோள் காட்டி, பிரிட்டிஷ் பைனான்சியல் டைம்ஸ் அண்மையில் வெளியிட்டது. 8ஆம் நாள் முதல் சீனாவில் புதிய நடவடிக்கை அமலுக்கு வந்ததை அடுத்து, உலக முதலீட்டாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கை வந்துள்ளது. சீனா மற்றும் வெளிநாடுகளிடையே உள்ள மக்கள் தொடர்பும் வணிக பயணமும் விரைவாக மீட்சி பெறுமென  சீனாவிலுள்ள பல வெளிநாட்டு வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் கருதியுள்ளன. மேலும், பல வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஏற்கனவே உயர் அதிகாரிகளின் சீனப் பயணத் திட்டத்தை வகுத்து தொடர்புடைய செயல்திட்டங்களை  மீண்டும் தொடங்கி வைத்து புதிய முதலீட்டு வாய்ப்புகளைத் தேடிப் பார்த்துள்ளதாகத் தெரிவித்தன.

கடந்த 3ஆண்டுகளில், அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் சீனாவை பற்றி அவதூறு பரப்பியுள்ளனர். கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த, சீனா கண்டிப்பான முறையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்ததால், எல்லைகளை திறக்க வேண்டுமென அவர்கள் கோரினர். ஆனால், சீனா நோய்தொற்றின் நிலைமைக்கிணங்க, கட்டுப்பாட்டு நடவடிக்கையைத் தளர்த்திய போது, சீனாவின் நோய்தொற்று சீனாவிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அபாயம் கொண்டு வருமென அவர்கள் அவதூறு பரப்பினர். பொதுவாக கூறி, சீனா எப்படி செய்தாலும், தொழில் சங்கிலியைச் சீனாவிலிருந்து இடம் மாற்ற அவர்கள் முயன்று வருகின்றனர்.

இருப்பினும், 3 ஆண்டுகள் நீடித்த அவர்களின் தந்திரம் தோல்வியடைந்தது. தரவின்படி, 2020ஆம் ஆண்டு சீனாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு முந்தைய ஆண்டில் இருந்ததை விட, 6.2விழுக்காடு அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டு அது 14.9விழுக்காட்டை எட்டி லட்சம் கோடி யுவானை முதன்முறையாகத் தாண்டி புதிய வரலாற்றுப் பதிவை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. 2022ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் சீனாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு 2021ஆம் ஆண்டின் முழு தொகையைத் தாண்டி 9.9விழுக்காடு அதிகரித்துள்ளது. சீனச் சந்தை வெளிநாட்டு முதலீட்டுக்கு மிகுந்த  ஈர்ப்பாற்றலைக் கொண்டிருக்குமென இது வெளிக்காட்டியுள்ளது.