காலிஃபோனியாவில் அவசர நிலை:பைடன் அறிவிப்பு
2023-01-10 11:52:01

காலிஃபோனியாவில் அவசர நிலை அமல்படுத்துவதாக அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் ஜனவரி 9ஆம் நாள் அறிவித்தார். காலிஃபோனியாவில் குளிர்காலப் புயலால் வெள்ளப் பெருக்கு, மண் சரிவு முதலியவை ஏற்பட்டுள்ளன. இதையடுத்து மீட்புப் பணிகளுக்குக் கூட்டாட்சி அரசு உதவியளிக்க பைடன் உத்தரவு பிறப்பித்தார்.