உற்பத்தி வரிசைகளில் உயிராற்றல்
2023-01-11 17:27:59

2023ஆம் ஆண்டில் சீனாவில் நிறைய புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கொவைட்-19 நோய் தொற்று கட்டுப்பாட்டு கொள்கை சரிப்படுத்தப்பட்ட பிறகு, உற்பத்தியும் வாழ்க்கையும் இயல்பான நிலைக்குத் திரும்பி வருகின்றன. பல்வேறு இடங்களில் உற்பத்தி மீண்டும் சுறுசுறுப்பாக தொடங்கியுள்ளது. சுறுசுறுப்பாக இயங்கி வரும் உற்பத்தி வரிசைகளின் மூலம் சீன பொருளாதார வளர்ச்சியின் உறுதித்தன்மையையும் உயிராற்றலையும் அறிந்துகொள்ள முடிகிறது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 3 ஆண்டுகளில், சீனர்கள் சவால்களைக் கூட்டாக சமாளித்தனர். 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மக்களின் கூட்டத்திலும் சுறுசுறுப்பான உற்பத்தி நடவடிக்கையிலும் உயிராற்றலையும் எதிர்பார்ப்பையும் உனர முடிகின்றது. குளிர்காலத்துக்குப் பிறகு வசந்தகாலம் என்பது குறிப்பிடத்தக்கது.