சீனாவில் ஹுவாலாங்-ஒன்று தொழில்நுட்பத்துடன் கூடிய அணு உலை இயக்கம்
2023-01-11 15:05:26

சீனாவின் மேற்குப் பகுதியில் ஹுவாலாங்-ஒன்று தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதலாவது அணு உலை ஜனவரி 10ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று மின் வலைப்பின்னலுடன்  இணைந்து, மின்சார உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. வணிக ரீதியிலான செயல்பாட்டிற்காக மற்றொரு முக்கிய காலடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அணு மின்சக்தி துறையில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமான ஆராய்ச்சி, வடிவமைப்பு, தயாரிப்பு, கட்டுமானம் மற்றும் இயக்கம் ஆகியற்றின் அடிப்படையில், முழுமையாக அறிவுசார் சொத்துரிமைக் கொண்ட 3ஆவது தலைமுறை அணு மின்சக்தி தொழில்நுட்பம், ஹுவாலாங்-ஒன்று அணு உலையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பல்வேறு தொழில்நுட்ப செயல்திறன்கள் உலகின் முன்னிலையை எட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.