பல்துறை வணிக மையமாக மாறும் இலங்கை விமான நிலையம்
2023-01-11 18:37:27

முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதம், இலங்கையின் தெற்குக் கடற்கரையில் அமைந்துள்ள மட்டாலா சர்வதேச விமான நிலையத்தை பல்நோக்கு வணிக மையமாக மாற்றுவதற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், விமானத் துறை மற்றும் விமானத் துறை அல்லாத வணிக வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானத் துறை அமைச்சர் நிமல் சிரிபாலா டீ சில்வா, இது தொடர்பான தாக்கல் செய்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசின் செய்தித் தொடர்பாளர் பண்டுலா குணவர்த்தனே தெரிவித்தார்.

மட்டாலா விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்களுக்கு பல சலுகைகளை இலங்கை அளித்துள்ளது. இரு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, கடந்த மாதம் இவ்விமான நிலையத்தில் மீண்டும் சேவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.