எத்தியோபியாவின் தலைமையமைச்சருடன் ச்சின் காங் சந்திப்பு
2023-01-11 17:20:51

எத்தியோபியாவின் தலைமையமைச்சர் அபி அகமது அலி, அந்நாட்டில் பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் சின் கங்குடன் 10ஆம் நாள் சந்திப்பு நடத்தினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு வெற்றிக்கரமாக நிறைவுற்றதற்கு அபி வாழ்த்து தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், உள்கட்டமைப்பு, பசுமை பொருளாதாரம், வேளாண்மை, தொழில் பூங்கா கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்புகள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளன என்றும், மேலதிக சீனத் தொழில் நிறுவனங்கள் எத்தியோபியாவில் முதலீடு செய்வதை வரவேற்கிறோம் என்றும் தெரிவித்தார்.

சின் கங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில், இரு நாட்டுத் தலைவர்களின் நெருங்கிய தொடர்பு, புதிய யுகத்தில் இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு வழிக்காட்டியது. பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, மேலதிக சீனத் தொழில் நிறுவனங்கள் எத்தியோபியாவில் முதலீடு செய்வதற்கு ஊக்கமளிப்போம் என்றார்.

மேலும், இப்பயணத்தின்போது, எத்தியோபியாவின் துணைத் தலைமையமைச்சரும், வெளியுறவு அமைச்சருமான டெமேக் மெகோனெனுடன் சின் கங் சந்திப்பு நடத்தினார்.