பிரிட்டன்-ஜப்பான் பாதுகாப்பு உடன்படிக்கை – சீனா கருத்து
2023-01-11 17:31:58

பிரிட்டனும் ஜப்பானும் ஒரு புதிய பாதுகாப்பு உடன்படிக்கையில் கையொப்பமிடத் திட்டமிட்டுள்ளன. இதன்படி, பிரிட்டன் படைகள் ஜப்பானில் நிலைநிறுத்துவது அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 11ஆம் நாள் கூறுகையில், ஆசிய-பசிபிக் பிரதேசம் அமைதி வளர்ச்சிக்கான முக்கிய இடமாகும். மாறாக, புவி அரசியல் போட்டிக்கான இடம் அல்ல. பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புக் கூட்டாளியாக சீனா திகழ்கிறது. எந்தவொரு நாட்டுக்கும் சீனா அறைகூவலாக இருக்காது. தொடர்புடைய நாடுகள் மேற்கொண்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு, பல்வேறு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு மர்றும் நம்பிக்கையின் அதிகரிப்புக்குத் துணைபுரிய வேண்டும் என்றார்.