சீனாவில் புதிய தகவல் தொழில் நுட்பத் தொழிற்துறையின் வளர்ச்சி
2023-01-11 17:23:04

சீனாவில் தனிநபர் கணினிகளின் ஆண்டு உற்பத்தி எண்ணிக்கை உலகளவில் சுமார் 80 விழுக்காடு வகிக்கிறது. திறன்பேசிகள் மற்றும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளின் ஆண்டு உற்பத்தி எண்ணிக்கை உலகளவில் 65 விழுக்காட்டுக்கு மேல் உள்ளது.

அளவு மற்றும் தரம் ரீதியாகப் பார்க்கும்போது சீனாவின் புதிய தகவல் தொழில் நுட்பத் துறை, உலகத்தில் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. சீனப் பொருளாதாரத்துக்கு புதிய அதிகரிப்புத் துறை இதுவாகும்.

கடந்த 10 ஆண்டுகளில், சீனாவில் மின்னணு தகவல் தயாரிப்புத் துறையின் வருமானம் 2012இல் இருந்த 7 லட்சம் கோடி யுவானிலிருந்து 2021இல் 14 லட்சத்து 10 ஆயிரம் கோடி யுவானாக அதிகரித்தது. மேலும், பல்வேறு புதிய நுண்ணறிவுப் பொருட்களும் செயலிகளும், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.