சீனா-ஆப்பிரிக்க ஒன்றியம் இடையே 8ஆவது நெடுநோக்கு பேச்சுவார்த்தை
2023-01-11 20:08:26

சீன வெளியுறவு அமைச்சர் சின் கங் ஜனவரி 11ஆம் நாள் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகத்தில் இவ்வமைப்பின் ஆணையத் தலைவருடன் 8ஆவது சீன-ஆப்பிரிக்க ஒன்றிய நெடுநோக்கு பேச்சுவார்த்தையை நடத்தினார்.

சின் கங் கூறுகையில், ஆப்பிரிக்காவுடனான தூதாண்மை உறவுக்கு சீனா எப்போதுமே முன்னுரிமை அளித்து வருகிறது. தற்போது சீனா-ஆப்பிரிக்க ஒன்றியம் இடையே சீரான ஒத்துழைப்புறவு நிலைநிறுத்தப்பட்டு வருவதோடு, அரசியல் நம்பிக்கையும் வலுவடைந்து வருகிறது. ஆப்பிரிக்காவுடன் தொடர்ந்து கூட்டாக வளரும் கூட்டாளியாகப் பழகி, புதிய யுகத்தில் சீன-ஆப்பிரிக்க பொது சமூகத்தை உருவாக்க சீனா விரும்புகிறது. மேலும், ஜி20 அமைப்பில் இணைய ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கு சீனா முதலில் ஆதரவளிக்கிறது என்று தெரிவித்தார்.

சீன-ஆப்பிரிக்க உறவின் எதிர்காலம் மீது நம்பிக்கை கொண்டுள்ள இருதரப்பினர்கள், பேச்சுவார்த்தைக்குப் பிறகு குறிப்பிட்ட ஒத்துழைப்பு ஆவணத்தில் கையொப்பமிட்டனர்.