மேலாதிக்க தலையீட்டுக் கைவிடுமாறு மெக்சிகோ அரசுத் தலைவரின் கோரிக்கை
2023-01-11 17:34:08

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ நகரில் 10ஆம் நாள் நடைபெற்ற 10ஆவது வட அமெரிக்க உச்சி மாநாட்டில் அமெரிக்க அரசுத் தலைவர் பைடன், மெக்சிகோ அரசுத் தலைவர் லோபெசி, கனடா அரசுத் தலைவர் ட்ருதோ ஆகியோர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு பின் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் மேலாதிக்க தலையீட்டு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று  மெக்சிகோ அரசுத் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

9ஆம் நாள் அமெரிக்க-மெக்சிகோ அரசுத் தலைவர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினர். லத்தின் அமெரிக்க மற்றும் கரீபீயன் நாடுகளின் மீதான அலட்சியத்தை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று லோபெசி வேண்டுகோள் விடுத்தார்.