தொற்று நோய்க்கு எதிரான உலக ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கும் அமெரிக்கா
2023-01-11 09:50:15

அண்மைக்காலமாக, அமெரிக்கா ஒரு புறம் சீனப் பயணிகள் மீது எல்லை நுழைவுக் கட்டுப்பாடு விதித்துக் கொண்டு, சீனாவுக்கு தடுப்பூசி  உதவி அளிக்க விரும்புவதாக கூறி வருகின்றது. அமெரிக்காவின் இத்தகைய இரட்டை நிலைப்பாட்டை  உலக மக்கள் அதிகமாக பார்த்துள்ளனர்.

கோவிட்-19 தடுப்பூசியை எடுத்துக்காட்டாக கொண்டு,  உலகில்  மிக அதிக தடுப்பூசி உதவி வழங்கிய நாடு என அமெரிக்கா தன்னைத் தானே கூறிக் கொள்கின்றது.. 2023ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 110கோடி டோஸ் தடுப்பூசிகளை நன்கொடையாக அளிக்கப்படும் என உறுதியளித்திருந்தது. ஆனால்,  இவ்வாண்டின் ஜனவரி 5ஆம் நாள் வரை, மொத்தம் 66.51கோடி டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, அமெரிக்கா விரைவில் காலாவதியாக கூடிய  கோவிட்-19 தடுப்பூசிகளை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பியது. அமெரிக்காவின் இத்தகைய செயல் அவமானகரமானது என்று ஆப்பிரிக்க நாடுகள் குற்றச்சாட்டியுள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில், அமெரிக்கா கிட்டத்தட்ட அனைத்து வைரஸ் திரிபுகளையும் கண்டுள்ளது. ஆனால், அமெரிக்க அரசு, ஆக்கப்பூர்வமற்ற முறையில் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொண்டதால், இந்த வைரஸ் திரிபுகள் உலகின் பல்வேறு இடங்களுக்கும் பரவியுள்ளன. 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் வரை அமெரிக்கக் குடிமக்கள் மொத்தம் 2கோடி 31லட்சத்து 95ஆயிரம் பயணங்களை மேற்கொண்டனர். தற்போது, எஸ்பிபி.1.5 ரக வைரஸ் திரிபு மட்டும், அமெரிக்காவில் 40 விழுக்காட்டுக்கும் மேலதிகமான தொற்று பாதிப்பை ஏற்படுத்தியது.

கடந்த 3 ஆண்டுகளில், சீனா உலகச் சுகாதார அமைப்புடன் 60 முறைக்கும் மேலாகத் தொழில்நுட்ப பரிமாற்றம் மேற்கொண்டுள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 4 முறை பரிமாற்றங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் சீனா கோவிட்-19 வைரஸ் மரபணுக்களின் தரவுகளைத் தொடர்ச்சியாக பகிர்ந்து கொண்டு வருவதோடு 120 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு  220 கோடி டோஸ் தடுப்பூசிகளையும் விநியோகம் செய்துள்ளது.

இந்தப் பங்களிப்பைக் கொண்டு கோவிட்-19க்கு எதிரான உலகின் போராட்டத்தில் யார் பங்களிப்பாளர்  யார் சீர்குலைப்பாளர் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.