ஆப்கானில் குண்டுவெடிப்பு தாக்குதல்: சீனா கண்டனம்
2023-01-12 18:31:38

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மையப் பகுதியில் 11ஆம் நாள் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில், குறைந்தபட்சம் 5 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 12ஆம் நாள் கூறுகையில், அனைத்து வன்முறை பயங்கரவாதச் செயல்களையும் சீனா எதிர்க்கிறது. இச்சம்பவத்துக்குக் கடும் கண்டனத்தையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலையும் சீனா தெரிவிக்கிறது என்று கூறினார்.