வளரும் நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வரும் சீனா
2023-01-12 18:31:22

வளரும் நாடுகளின் நிதி வளர்ச்சி, எரியாற்றல் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்கும் விதம், இந்தியா ஜனவரி 12, 13 ஆகிய நாட்களில் உலகளாவிய தெற்கு நாடுகளின் குரல் உச்சிமாநாட்டை நடத்த உள்ளது. ஆனால் இம்மாநாட்டில் பங்கெடுக்க, ஜி20 அமைப்பைச் சேர்ந்த இதர பெரிய வளரும் நாடுகள் மற்றும் புதிய வளர்ச்சி வாய்ப்பைக் கண்டுள்ள பொருளாதாரச் சமூகங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது தொடர்பான கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 12ஆம் நாள் கூறுகையில், இம்மாநாட்டை நடத்துவதற்கான யோசனை மற்றும் திட்டம் பற்றி இந்தியா சீனாவிடம் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

வளரும் நாடுகளின் பொது விருப்பம் மற்றும் நியாயமான அக்கறையில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்துமாறு சீனா எப்போதுமே வேண்டுகோள் விடுத்து வருகிறது. வளரும் நாடுகளின் ஒற்றுமையுடனான ஒத்துழைப்புக்கும் கூட்டு வளர்ச்சிக்கும் சீனா பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.