2022 சீன நுகர்வோர் விலைக் குறியீடு 2 விழுக்காடு உயர்வு
2023-01-12 16:31:08

சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் 12ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு, முந்தைய ஆண்டில் இருந்ததை விட 2 விழுக்காடு அதிகரித்தது. ஆனால் முழு ஆண்டுக்கு திட்டமிடப்பட்ட 3 விழுக்காடான உயர்வு வரம்பை விட குறைவு என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் திங்கள், நோய் கட்டுப்பாட்டை, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியுடன் சிறப்பாக இணைக்கும் வகையில், பல்வேறு பிரிவுகள், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு விநியோகம் மற்றும் விலைவாசி நிதானத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளன. விலைவாசி நிலையாக உள்ள நிலையில், சீனப் பொருளதாரத்தின் உறுதித் தன்மை, சந்தையின் பெருமளவு, விலைவாசி நிதானத்துக்கான நடவடிக்கைகளின் பயன் முதலியவை வெளிக்காட்டப்பட்டுள்ளன.