சர்வதேச சுற்றுலா துறை வளர்ச்சி மற்றும் உலக பொருளாதார மீட்சிக்கான சீனாவின் பங்கு
2023-01-12 18:23:13

சீன வணிக அமைச்சகம் 12ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் செய்தித் தொடர்பாளர் ஷு யுடிங் அம்மையார் கூறுகையில், பல்வேறு துறைகளுடன் இணைந்து, சீனர்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு சீரான சூழ்நிலையை உருவாக்கி, சர்வதேச சுற்றுலாத் துறைக்கும் உலக பொருளாதார மீட்சிக்கும் பங்காற்ற சீனா விரும்புகிறது என்றார்.

கோவைட்-19 நோய் தொற்று சீனா உள்பட உலக நாடுகளின் சுற்றுலா துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஜனவரி 8ஆம் நாள் முதல், கோவைட்-19 நோய் தொற்று குறித்து சீனா பி வகையின் பி நிலை கட்டுப்பாட்டுக் கொள்கையை மேற்கொள்ள துவங்கியது. புள்ளிவிவரங்களின் படி, வெளிநாடுகளிலுள்ள சில சுற்றுலா தளங்களுக்கான விமான சீட்டுகள் மற்றும் ஹோட்டல்களுக்கான முன்பதிவுகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. அதேவேளையில், சீனாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.