2023ஆம் ஆண்டு உலகளாவிய இடர் அறிக்கை
2023-01-12 13:34:01

உள்ளூர் நேரப்படி ஜனவரி 11ஆம் நாள் உலகப் பொருளாதார மன்றம் 2023ஆம் ஆண்டுக்கான உலகளாவிய இடர் அறிக்கையை வெளியிட்டது.

மோதல் மற்றும் புவிசார் பொருளாதாரம் காரணமாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, உலகம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான குறுகிய கால இடர்ப்பாடு என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 2 ஆண்டுகளில் எரியாற்றல் மற்றும் தானிய விநியோகத்தின் பற்றாக்குறை தொடர்ந்து உலகத்தைப் பாதிக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, வாழ்க்கைச் செலவு மற்றும் கடன் செலவு தீவிரமாக அதிகரித்து வரும். அதே வேளையில், காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு முதலிய நீண்டகால அறைகூவல்களை எதிர்கொளும் வகையில், சர்வதேச சமூகம் நடத்திய பல்வேறு நடவடிக்கைகளை இந்த குறுகிய கால இடர்ப்பாடு சீர்குலைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகம் பயனுள்ள முறையில் ஒத்துழைப்புகளை மேற்கொள்ளாமல், அடுத்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து புவி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழிவகுக்கும் என்று இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.