சீனாவில் 23லட்சத்தைத் தாண்டிய 5ஜி அடிப்படை நிலையங்கள்
2023-01-12 10:48:59

சீனாவில் 5ஜி அடிப்படை நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 23லட்சத்தைத் தாண்டியுள்ளது. புதிய ரக தரவு மையங்களின் கட்டுமானத்தில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு, புதிய ரக தொலைதொடர்பு அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை முன்னேற்றுவதற்கான கொள்கை மற்றும் நடவடிக்கையைச் சீனா வெளியிட்டு 5ஜி மற்றும் ஜிகாபிட் இணைய வேகத்தை வழங்கும் வலையமைப்பின் கட்டுமானத்தை விரைவுப்படுத்தவுள்ளது. மேலும், 6ஜி தொழில்நுட்ப ஆய்வைச் சீனா பன்முகங்களிலும் முன்னெடுக்கவுள்ளது.