அமெரிக்காவில் விமான சேவைகள் பாதிப்பு
2023-01-12 16:28:49

தகவல் பரிமாற்ற கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்காவின் உள்நாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக முடங்குவதாக என்று ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் 11ஆம் நாள் அறிவித்துள்ளது. இதனால், அமெரிக்கா முழுவதும் விமானச் சேவைகள் பெருமளவில் தள்ளி வைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது சேவை நிறுத்தம் குறித்த ஆணை நீக்கப்பட்டதுடன், விமானங்கள் மீண்டும் இயல்பாக இயங்கியுள்ளன. ஆனால்,  ஏராளமான அமெரிக்க பயணிகளின் பயணத் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.